Dr. சுகன்யா குகன்
பஞ்சலிங்கம்
Nov 7, 2025
பஞ்சலிங்கம்
Nov 7, 2025
"*நான் நேசித்த சந்திக்க விரும்பிய தனியார் வகுப்பு தோழி* *Dr சுகன்யா குகன்* (*VGHS 1990*) *மிக அண்மையில் இறைவனடி சேர்ந்த செய்தி*( *23 AUG 1971* - *10 OCT 2025*) என்னை மிகவும் மனத்தை உடைத்து போட்டது 85 களில் 84 களில் நான் யுனிவர்சல் என்ற தனியார் டியூட ரில் கல்வி கற்றபோது சந்தித்த துணிச்சலா பெண்களில் அவர் முதன்மையானவர். அவரது புன்னகையும் நேர்மையும் என்றும் மனதை விட்டு அகலாதவை 1983:84 காலகட்டத்தில் பெண்களிடம் கதைப்பதே தெய்வ குற்றமா பார்த்த சமூகத்தில் தேவைக்கும் அளவாகவும் கதைக்க தெரிந்தவர் மிக இயல்பாக்கவும் இலகுவாகவும் பழகக் கூடியவர் கல்வியிலும் சிறந்த விளங்கினார் .
நட்பாக நான் அவருக்கு வைத்த புனைபேரை அதே தனியார் கல்வியில் பயின்ற எனது சகோதரியிடம் இலகுவாக அது நியாயமா என்று போய் கேட்டது இன்றும் என் நினைவில் நிற்கிறது.
துணிச்சல் மட்டும் அல்ல கல்வி லும் அவர் தன்னை கெட்டிக்காரியாக த்தான் வகுப்பிலே இனம் காட்டியிருந்தார். அதுபோல அதை சாதித்து காட்டினார். மருத்துவராக பணிபுரிந்தார். அவரிடம் பழைய கதைகள் பல பேச காத்திருந்தபோது அந்த செய்தி என்னை தூக்கிப் போட்டது! அண்மையில் நான் நேசித்த எனது நெருங்கிய உறவுகளும் நட்புகளும் என்னை விட்டுப் போய்க் கொண்டே இருக்கின்றனர் தேசத்து நட்பும் நேசமும் தொடர வேண்டும் என்பது என்னுடைய பேராசை !சுகன்யாவின் இழப்பு ஈடு செய்ய முடியாதது!
இடம் பெயர்வு பின் எந்தத் தொடர்புகளுமே கிடைக்கவில்லை.
அவரைப் பற்றி விசாரித்து அவரை சந்திக்க விரும்புகிறபோது சந்திக்க முடியாத நிலையில் அவர் இருந்ததை கேள்விப்பட் டு மிகவும் மனம் வருந்தினேன் . நாப்பது ஆண்டுகளுக்கு முன் நேசித்த ஒரு தூய்மையான நட்பு என்று என்னுடன் இல்லை ! என்னைப் போன்ற பலர் அந்த தூய நட்பை இன்று இழந்து நிற்கிறார்கள்
அவருடைய நண்பர்களும் தோழிகளும் இங்கு இருக்கலாம் அவர்கள் ஆழ துயரில் இருக்கலாம் அவர்களுடன் நான் துயர் பகிர்ந்து கொள்கிறேன்
அவரின் இழப்பினால் வாழும் குடும்பத்தினர் நண்பர்கள் உறவினர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்து கொள்கிறேன்.
அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் !
மீண்டும் சந்தித்தால் நாங்கள் மீண்டும் ஒருமுறை நட்பாக பேசிக்கொள்ளலாம்! சென்று வா தோழி!!
என்றும் நட்புடன்
கனத்த இதயத்துடன்
பஞ்சலிங்கம்
(*யூனிவர்சல் நண்பர்களின் சார்பாக* )"
Share your news, announcements, opportunities, or stories with fellow community members. All submissions are reviewed before publishing.
Submit a Post